Friday, May 11, 2007

உபரியான தர்மங்கள்

தமிழில் இஸ்லாம் .காமின் நபிமொழி தொகுப்பு- புலுகுல் மராம் என்ற தலைப்பில் இருந்து தாஃவாவிற்காக எடுக்கப்பட்டது

இறைவனுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில் அல்லாஹ் தன்னுடைய நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். (ஹதீஸ் முழுவதும் சொல்லப்பட்டது) அவர்களில் ஒருவர் தன்னுடைய வலக் கை செய்யும் தர்மத்தை தனது இடக் கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

(மறுமையில்) மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான், ஹாம்கி

எந்த முஸ்லிம் ஆடையற்றிருக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு ஆடை அணியச் செய்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பச்சை நிற ஆடையை அணிவிப்பான். எந்த முஸ்லிம் பசியுடனிருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு உணவளிக்கின்றாரோ அல்லாஹ் அவரை சுவனத்தின் பழவகைகளை உண்ணச் செய்வான். எந்த முஸ்லிம் தாகித்திருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு நீர் புகட்டுகின்றாரோ, அல்லாஹ் (சுவர்க்கத்தில்) அவருக்கு 'அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் பானத்தை புகட்டுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இதன் அறிவிப்புத் தொடர் பலஹீனமானது

மேலிருக்கும் கை கீழிருக்கும் கையை விடச் சிறந்தது. மேலும், நீ தர்மத்தை உன்னுடைய சொந்தபந்தங்களிலிருந்து தொடங்கு தேவைக்குப் போக (மீதம்) உள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். எவர் (பிறரிடம் தர்மம் கேட்காமல்) தன் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறாரோ, அல்லாஹ்வும் அவனுடைய சுயமரியாமையைப் பாதுகாக்கின்றான். எவர் (ம்டைத்ததை வைத்துப்) போதுமென்ற மனத்துடன் (தர்மத்தை ஏற்காமலேயே) இருந்து வருகிறாரோ, அல்லாஹ்வும் அவருக்குப் போதுமென்ற மனத்தையளிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஹக்கிம் இப்னு ஹிஜாம்(ரலி) அறிவிக்கிறார்.

இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

தர்மத்தில் சிறந்தது எது? என்று மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத் , அஹ்மத்

இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா மற்றும் ஹாம்மில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மம் செய்யுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் (ஒருநாள்) கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் ஒரு தீனார் உள்ளது? என்று கூறினார். அதற்கு, நீ அதை உனது செலவுக்கு வைத்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், என்னிடம் மற்றுமொன்றுள்ளது என்று கூறினார். அதற்கு, நீ உன்னுடைய பிள்ளைகளுக்கு செலவிடு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றொன்றுமுள்ளது என்றார். அதற்கு, நீ அதை என்னுடைய ஊழியர்களுக்குச் செலவிடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், என்னிடம் மற்றொன்றும் உள்ளது என்றார். அதற்கு, அதைப் பற்றி நீயே தீர்மானித்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
, நஸயீ

இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் வீட்டு உணவை வீணடிக்காமல் செலவு செய்யும் பெண்ணுக்கு அதைச் செலவிட்ட அளவுக்கு நன்மை உண்டு. அதை சம்பாதித்ததற்காக அவளுடைய கணவனுக்கும் நன்மையுண்டு. அதைப் பாதுகாக்கும் கரு¥லக் காப்பாளருக்கும் அதே போன்ற நன்மை உண்டு. இது போன்றே மற்ற செலவினங்களிலும் நன்மை உண்டு. இவர்களில் எவர் காரணத்தாலும் மற்றவருக்குரிய நன்மை குறைக்கப்பட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மனைவி ஜைனப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தர்மம் செய்யுமாறு இன்று தாங்கள் கட்டளையிட்டார்கள். என்னிடம் சில நகைகள் இருந்தன. அவற்றை தர்மம் செய்வதை விட நான் விரும்பினேன். ஆனால் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களோ (நான் செலவிட விரும்புவோரை விட) அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அதற்கு உரிமையுண்டு என்று கூறிவிட்டார். (நான் என்ன செய்வது) என்று கேட்டார். அதற்கு, மஸ்வூத் உண்மையே சொன்னார். நீ செலவிட விரும்புவோரை விட, உன்னுடைய கணவன் மற்றும் உன் பிள்ளைகள் தாம் அதிகம் உரிமை பெற்றவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

எவன் மக்களிடம் (தன் தேவைகளை) எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கின்றானோ, அவன் மறுமை நாளில் தனது முகத்தில் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் (எலும்புக் கூடாக) வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களின் பொருட்களை எவன் யாசித்துக் கொண்டே இருக்கின்றானோ, அவன் நெருப்புக்கங்கையோ கேட்கின்றனர். இனி விரும்பியவர் கூட்டியோ, குறைத்தோ வாங்கி கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து (விறகுக் கட்டைகளை கட்டி, அதை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்து, விற்பனை செய்கிறார். அது மக்களிடம் யாசிப்பதை விட்டும் அவரைத் தடுத்து விடுகிறதெனில், அதுவே மக்களிடம் கேட்பதை விட அவருக்குச் சிறந்ததாகும். மக்கள் கொடுத்தாலும் சரி. கொடுக்காவிட்டாலும் சரி என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு அல் அவ்வாம்(ரலி) அறிவிக்கிறார்.

அதிகாரம் உள்ளவரிடமும் தவிர்க்க முடியாத விஷயத்திற்காகவும் தவிர மற்ற யாசகங்கள், ஒரு மனிதன் தன் முகத்தில் தானே ஏற்படுத்திக் கொள்ளும் வடுவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : www.tamilislam.com

5 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும். உங்களது தாவாப் பணி மென்மேலும் சிறந்து விளங்க எல்லம் வல்ல இறையோனைப் பிரார்த்திக்கிறேன். நமது ஊரின் சிறப்புகளைச் சொல்லி மாளாது. விரைவில் உங்கள் தளத்தின் மூலம் சொல்கிறேன். எனது " www.tamilislam.webs.com' ' இணைய தளத்தினை பர்த்து விட்டு உங்களது comments களை Feed Back பக்கத்தில் தெரிவிக்கவும். நன்றி.
குலசை.சுல்தான்.(ER.Sulthan)

ஸாலிஹ்குலசை said...

வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்
தங்களின் வருகைக்கு நன்றி இந்த தாஃவா பணி சிறக்கவும் மறுமையில் வெற்றிகிடைக்கவும் துவா செய்யவும். இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களின் தளத்திற்கு சென்று என்னுடைய பதிலை வைக்கின்றேன். வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் பல.....!!

Anonymous said...

நமது குலசைப் பற்றியும் எனது இளமைக் காலங்கள்
பற்றியும் ஒரு சிறுக் கவிதை ஒன்று.

குலசை எங்க மண்!

உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள்-
உச்சியில் நின்று பார்க்கிறேன்
ஒய்யார சுவனத்துப் பூங்கா இது!
இடி ஒசையாய் அலைகள் இரவெல்லாம் தாலாட்டும்!
"அ" என்ற அகரம் எழுதிப் பழகிய மண் இது.

கரு ஈந்து கல்வி தந்து திரு கொண்ட திரவியம்
தந்த அட்சயப் பாத்திரம் இது.
ஆரம்பக் கல்வியில் அடியெடுத்து நடைப் பழகிய
அசனியா கல்விக் கூடம் உண்டு.
உயிர்க் கல்வியாம் உயர்க் கல்வி தந்த
அக இருள் போக்கும் திருவருள் பள்ளி இங்கு!

என் தமிழ் நாவைச் செதுக்கிய-திரு
நாவுக்கரசர்-தமிழ் தந்தவர்!
கணிதம் எனைக் காதலிக்க தூதுப் புறா-
பிரம்பறியா மகாலிங்க வாத்தியார்.
அன்பான அக்காக்கள்! அடித்து நொறுக்கும்
இந்தி வாத்தியா¡¢ங்கு உண்டு.

நன்றி நவிழும் வேளை இது.
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
எனை ஈன்ற அன்னைக்கும்
நல் கல்வி தந்த ஆசான் களுக்கும்
நன்றி சொல்லும் வேளை இது.

“எலே மக்கா” என்ற தாரக மந்திரம்
நண்பர்களுடன் எனைக் கட்டிப் போடும்!

மதவாதம் பேசும் பெருசுகளின்
மடத்து திண்ணைகள் இங்கு இல்லை!
மூட நம்பிக்கைகளின் தாய் வீடாம் தர்காக்கள் உண்டு-
உடைத்து நொறுக்க வேண்டிய பாழ் மண்டபங்கள்!!

மத நல்லிணக்கத்திற்கு மகுடம் சூட்டும் எங்க மண்!
எனக்கொரு தாய் உண்டு வடக்கே! என்
நண்பனுக்கு தாய் வீடு தெற்கே!-எனை தமிழ்-
உலகறியச் செய்த மண்ணே-இன்று நீயும்
உலகெல்லாம் செல்கிறாய் ஐம்பொன்னாய்!!

தவழ்ந்த மண்ணும் தளிர் நடை பயின்ற ஊரும்
மறக்க முடியாத ஒன்று.
தொலைந்த முகவரிகளைத் தேடிடுவோம்
தொடர்புக் கொண்டு மகிழ்ந்திடுவோம்
கருவில் எனைச் சுமந்த தமிழ் மண்ணே-என்
கல்லறைக்கும் ஒரு இடந்தருவாயா தாய் மண்ணே!!
- குலசை.சுல்தான்.

Anonymous said...

நம்ம ஊரு குலசை பற்றி ஒரு சிறிய கவிதை ஒன்று இதோ.....
உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள்-
உச்சியில் நின்று பார்க்கிறேன்
ஒய்யார சுவனத்துப் பூங்கா இது!
இடி ஒசையாய் அலைகள் இரவெல்லாம் தாலாட்டும்!
"அ" என்ற அகரம் எழுதிப் பழகிய மண் இது.

கரு ஈந்து கல்வி தந்து திரு கொண்ட திரவியம்
தந்த அட்சயப் பாத்திரம் இது.
ஆரம்பக் கல்வியில் அடியெடுத்து நடைப் பழகிய
அசனியா கல்விக் கூடம் உண்டு.
உயிர்க் கல்வியாம் உயர்க் கல்வி தந்த
அக இருள் போக்கும் திருவருள் பள்ளி இங்கு!

என் தமிழ் நாவைச் செதுக்கிய-திரு
நாவுக்கரசர்-தமிழ் தந்தவர்!
கணிதம் எனைக் காதலிக்க தூதுப் புறா-
பிரம்பறியா மகாலிங்க வாத்தியார்.
அன்பான அக்காக்கள்! அடித்து நொறுக்கும்
இந்தி வாத்தியா¡¢ங்கு உண்டு.

நன்றி நவிழும் வேளை இது.
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
எனை ஈன்ற அன்னைக்கும்
நல் கல்வி தந்த ஆசான் களுக்கும்
நன்றி சொல்லும் வேளை இது.

“எலே மக்கா” என்ற தாரக மந்திரம்
நண்பர்களுடன் எனைக் கட்டிப் போடும்!

மதவாதம் பேசும் பெருசுகளின்
மடத்து திண்ணைகள் இங்கு இல்லை!
மூட நம்பிக்கைகளின் தாய் வீடாம் தர்காக்கள் உண்டு-
உடைத்து நொறுக்க வேண்டிய பாழ் மண்டபங்கள்!!

மத நல்லிணக்கத்திற்கு மகுடம் சூட்டும் எங்க மண்!
எனக்கொரு தாய் உண்டு வடக்கே! என்
நண்பனுக்கு தாய் வீடு தெற்கே!-எனை தமிழ்-
உலகறியச் செய்த மண்ணே-இன்று நீயும்
உலகெல்லாம் செல்கிறாய் ஐம்பொன்னாய்!!

தவழ்ந்த மண்ணும் தளிர் நடை பயின்ற ஊரும்
மறக்க முடியாத ஒன்று.
தொலைந்த முகவரிகளைத் தேடிடுவோம்
தொடர்புக் கொண்டு மகிழ்ந்திடுவோம்
கருவில் எனைச் சுமந்த தமிழ் மண்ணே-என்
கல்லறைக்கும் ஒரு இடந்தருவாயா தாய் மண்ணே!!

- குலசை.சுல்தான்.

Dr.Anburaj said...

(மறுமையில்) மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான், ஹாம்கி

எந்த முஸ்லிம் ஆடையற்றிருக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு ஆடை அணியச் செய்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பச்சை நிற ஆடையை அணிவிப்பான். எந்த முஸ்லிம் பசியுடனிருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு உணவளிக்கின்றாரோ அல்லாஹ் அவரை சுவனத்தின் பழவகைகளை உண்ணச் செய்வான். எந்த முஸ்லிம் தாகித்திருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு நீர் புகட்டுகின்றாரோ, அல்லாஹ் (சுவர்க்கத்தில்) அவருக்கு 'அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் பானத்தை புகட்டுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

ஆனால் இந்து வேதமான திருமந்திரம் யாவருக்கும் ஈமின் அவன்இவன் என்றன் மின் என்று கூறுகின்றது.தேவையான யாருக்கும் மனிதாபிமான உணா்பின் அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்.சாதி மதம் ஊா் மொழி பற்று தேவையில்லை என்கிறாா்.எது சிறந்தது ?